இலகுவாக படிப்பது எப்படி?
- கண்ணாடி முறை (Mirror Technique)
- வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
- தலைகீழ் முறை (Upside-down Technique)
- வேகமாக எழுதும் முறை (speed writing)
கண்ணாடி முறை (Mirror Technique)
ஒரு பக்கத்தை எடுத்து மிக வேகமாக படிக்க வேண்டும். அதை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின்னர் அந்த பக்கத்தை கண்ணாடியில் காண்பித்து கண்ணாடியில் தெரிவதை படிக்கவும். அதை படிப்பதற்கு கடினமாக இருந்தாலும் உங்களால் அதை படிக்க முடியும். இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை 10 நிமிடம் செய்தால் 30நாட்களில் நீங்கள் படிக்கும் வேகம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

வார்த்தை ஓட்ட முறை (Run-through Technique)
இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது படிக்கும் பக்கத்தின் வார்த்தைகளை மட்டும் வேகமாகப் படிக்க வேண்டும். அதாவது, உங்கள் விரைவான கண்ணோட்டத்தால் ஒவ்வொரு வார்த்தையையும் உடனடியாக அடையாளங்கண்டு அடுத்த அடுத்த வார்த்தைக்குச் செல்கிறீர்கள். அந்த வார்த்தைகள் உங்கள் மூளையில் காட்சியாகப் பதிவாகிறது. அதாவது பாடப்பகுதியை படங்களாக மனதில் வைத்திருக்கிறீர்கள். இவ்வாறு முறையாகப் பயிற்சி செய்யும் போது மிகப்பெரிய வார்த்தைகளையும் உங்களால் உடனடியாக இலகுவாக அடையாளம் காண முடியும். இதனால் இயல்பாகவே படிக்கும் ஆற்றல் வேகமாக அதிகரிக்கும்

தலைகீழ் முறை(Upside-down Technique)
ஒரு பக்கத்தை வேகமாக படிக்க வேண்டும், அதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. பின் அதே பக்கத்தை தலைகீழாக மீண்டும் படிக்கவும். இந்த முறையில் படிக்கும் போது காலை, மாலையில் 10 நிமிடம் படித்தால் நீங்கள் படிக்கும் வேகம் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

வேகமாக எழுதும் முறை(speed writing)
அறிவு கூர்மையுடன் தன்னை நன்றாக தயார்படுத்தி இருக்கும் மாணவன் , தேர்வு வினாத்தாளில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் தெரிந்தும் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் குறித்த மணிநேரத்திற்குள் விடைகளை வேகமாக எழுதி முடிக்காவிடின், அவர் குறைந்த மதிப்பெண்களையே பெறுவார். எனவே, மாணவருக்கு வேகமாக எழுதும் திறன் மிக மிக அவசியமாகிறது. 5 நிமிட நேரத்தில் எழுத வேண்டிய பகுதியை 3 நிமிடத்திற்குள் எழுதி முடிப்பது சவாலானது. ஆனாலும், உங்களால் அந்த நேரத்திற்குள் எழுதி முடிக்க முடியும். இப்படி தொடர்ந்து பயிற்சி செய்யும் போது, உங்களுடைய எழுதும் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.














