வளமிகு மாத்தளை மாநகர் நடுவே
சுடர் விடும் நமது கல்லூரி
பாக்கிய வித்தியாலயமென்னும் பெயரால்
பண்பை உயர்த்து நல்லேணி
தமிழொடு ஆங்கில சிங்கள மொழிகள்
பயிற்றிடும் உத்தம பள்ளி
மும்மதம் போற்று நற்கோயில்-பல
பண்புகள் பயிற்றிடுமாமே-உயர்
கலைகளை வளர்த்திடுமாமே
மலைகளும் நதிகளும் மிகு நகர்க்கணியாய்த்
திகழ்ந்து நீ ஒளி விடுவாயே
வாழ்க! வாழ்க! வாழ்க!
பாக்கிய வித்தியாலயம் வாழ்க!















