மாத்தளை
எழில் மிகு இலங்கையின் பசுமைமிக்க மத்தியமலைநாட்டின் மத்தியில் அமைந்திருக்கும் மாத்தளையின் மகளிர் பாடசாலையான பாக்கியம் தேசிய பாடசாலை கடந்த 100 ஆண்டுகளாக மாத்தளை மாவட்டத்தில் கல்விப் பணி ஆற்றி தற்போது சுமார் 1600 மாணவர்களையும் 100 ஆசிரியர்களையும் கொண்ட சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. கல்வியில் மாத்திரமன்றி இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலை சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
சமூகத்தில் பெண்களின் நிலையை கல்வி மூலம் உயர்த்துவோம்.
நாட்டின் கல்விக் கொள்கைகளோடு தமிழ்ப் பண்பாட்டினையும் இந்து கலாசாரத்தையும் ஒருங்கிணைத்து எதிர்கால சவால்கற்கு முகம் கொடுக்கக் கூடிய தொழில் நுட்ப திறனும் ஆளுமையும் தன்னம்பிக்கையும் கொண்ட, நாட்டுக்கு நல்ல பிரஜைகளையும் வீட்டுக்கு நல்ல தலைவிகளையும் கல்வி மூலம் உருவாக்குதல்